"அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் சேருங்கள்" - மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
தகுதியான மாற்றுத் திறனாளிகள் அனைவரையும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் கீழ் சேர்க்கும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
தகுதியான மாற்றுத் திறனாளிகள் அனைவரையும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் கீழ் சேர்க்கும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தியோதயா அன்னயோஜனா கீழ் மாற்றுத் திறனாளிகளும் உணவு பொருட்கள் பெற தகுதி படைத்தவர்கள் என உணவு பாதுகாப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டு உள்ளது அந்த கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.இந்த நிலையில், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடிய அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும், அவர்களுக்கு சேர வேண்டிய உணவு பொருட்கள் முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யவும் தலைமை செயலாளர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை பயன் பெறாத மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

