வங்கிகள் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் - மத்திய அரசு முடிவெடுக்க ஒரு வார கால அவகாசம்

மாத தவணை வசூலிக்கும் விவகாரத்தில் வணிக நலனில் மட்டும் அக்கறை செலுத்தாமல், மக்களின் நிலையை அறிந்து முடிவெடுக்க, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையிலான, 6 மாத தவணை உரிமை காலத்தில், வங்கிகள் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு சுயமாக முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
வணிக நலனில் மட்டும் அக்கறை செலுத்தக்கூடாது என்றும், மக்கள் படும் துன்ப துயரங்கள் மீதும் மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், இது தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசு முடிவெடுக்க ஒரு வார காலம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்