செப்.14 முதல் அக்.1 வரை மழைக்கால கூட்டத்தொடர் - மக்களவை, மாநிலங்களவைக்கு விடுப்பு இல்லை

கொரோனா பரவல் உள்ளிட்ட பரபரப்புக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் கூடவுள்ளது.
செப்.14 முதல் அக்.1 வரை மழைக்கால கூட்டத்தொடர் - மக்களவை, மாநிலங்களவைக்கு விடுப்பு இல்லை
x
கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் கூட்டத் தொடரில் ஆலோசிக்கப்பட உள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீடு மசோதா, புதிய கல்விக் கொள்கை மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்ட நிலையில், தேசிய தேர்வு முகமை உருவாக்கமும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, வர்த்தக பாதிப்பு, பொருளாதார சரிவு போன்ற விவகாரங்களை எழுப்ப எதிர்க் கட்சிகள் தயாராகியுள்ளன. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத் தொடர் அக்டோபர்-1ஆம் தேதி வரை, மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் என்றும், சமூக இடைவெளி, கிருமி நாசினி உள்ளிட்ட உரிய பாதுகாப்பு அம்சங்களுடன்  நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்