அறிவிக்கப்பட்ட தேதிகளில் நீட், ஜே.இ.இ. தேர்வுகள் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட தேதிகளில் நீட், ஜே.இ.இ. தேர்வுகள் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
x
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஜூலை மாதம் நடைபெறவிருந்த நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை நடைபெறும் என்றும், நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும், நாட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பல மாநிலங்களிலிருந்து குரல்கள் எழுந்தன. 

இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி ஜேஇஇ மற்றும்  நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வுக்கு ஏற்கனவே நுழைவுச் சீட்டு
வழங்கப்பட்டு விட்டது. நீட் தேர்விற்கு விரைவில் நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

99 சதவீத மாணவர்களுக்கு விருப்பப்பட்ட தேர்வு மையங்கள் தரப்படும் என்றும், ஜேஇஇ தேர்வு மையங்களின் எண்ணிக்கை 570ல் இருந்து 660 ஆகி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு மையங்கள் 2546ல் இருந்து 3843 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 8 லட்சத்து 58 ஆயிரம் பேர் ஜேஇஇ தேர்வு எழுதுகின்றனர். 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுநோய் தொடர்பாக வழங்கப்பட்ட பல்வேறு அறிவுறுத்தல், வழிகாட்டுதல் மற்றும் உத்தரவுகளின் அடிப்படையில் விரிவான திட்டங்களும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்