பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகிக்க குழு - குழு அமைப்பதை ஏற்பதாக மன்னர் குடும்பம் உறுதி

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலை நிர்வகிக்க இடைக்கால ஏற்பாடாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைப்பதை ஏற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்றத்தில் மன்னர் குடும்பம் உறுதியளித்துள்ளது.
பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகிக்க குழு - குழு அமைப்பதை ஏற்பதாக மன்னர் குடும்பம் உறுதி
x
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலை நிர்வகிக்கும் மன்னர் குடும்பத்தின் உரிமையை உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 13-ஆம் உறுதி செய்தது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த  காலதாமதம் ஆகும் என்பதால் இடைக்கால ஏற்பாடாக திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த போது,  உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஏற்பாட்டை  ஏற்றுக்கொள்வதாக மன்னர் குடும்பம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் உறுதியளித்தார். மேலும் இது தொடர்பான ஆவணத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து அந்த குழு  பத்மநாப சுவாமி கோயிலை நிர்வகிக்கும் முறையை  4 வாரங்களுக்குள் அமல்படுத்த கால அவகாசம் வழங்கி  உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்