"புதுச்சேரியில் 7 முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்" - மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த 7 முதல் 14 நாட்கள் வரை முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த 7 முதல் 14 நாட்கள் வரை முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியில் தற்போது 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் . 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள்ளனர். புதுச்சேரியில் செவ்வாய் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Next Story

