இந்தியாவில் பொம்மைகள் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

இந்தியாவில் சீனாவின் வர்த்தக நடவடிக்கைகளை குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்தியாவில் பொம்மைகள் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
x
காஷ்மீரின் லடாக் பகுதியில் சீனா அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்தியாவில் பிரபலமான சீனாவின் டிக்டாக், ஹெலோ உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பொம்மைகள் இறக்குமதியில் இந்தியாவில் 70 சதவீதம் பங்கை சீனா மேற்கொள்கிறது. இதன்மூலம் கடந்த 2019-20ம் நிதியாண்டில் நான்காயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சீன பொம்மைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டன. இந்நிலையில் இந்தியாவில் பொம்மைகள் உற்பத்தியை அதிகரிக்கவும், சீனாவின் வர்த்தக நடவடிக்கைகளை குறைக்கவும் பிரதமர் மோடி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்