வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் - மாடுகளுடன் மக்கள் சாலையில் தஞ்சம்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கேத்தி மஜா, அப்புபூர் சல்லாபூர், நூர்கஞ்ச், கேத்தி பாரி, பசையா உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் தங்களது கால்நடைகளுடன் சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Next Story

