3 விமான நிலையங்களை தனியார் முதலீட்டுடன் மேம்படுத்தப்படும் - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு முக்கிய விஷயங்கள்
குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் விதத்தில், CET எனப்படும் பொது தகுதி தேர்வை நடத்துவதற்காக தேசிய ஆட்சேர்ப்பு முகமை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளதாக கூறினார். ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் விமான நிலையங்களை தனியார் முதலீட்டுடன் மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story

