ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி பெற்றார்.
x
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் மோதல் வெடித்தது. பிரச்சினை தீவிரமானதால் சச்சின் பைலட் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பிரிந்துசென்று, ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து, சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, டெல்லி சென்ற சச்சின் பைலட் ராகுல் காந்தியை சந்தித்ததையடுத்து, சமரசம் ஏற்பட்டது. ராஜஸ்தான் காங்கிரசில் நீடிக்கும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவர மூன்று பேர் கொண்ட குழு அமைத்தும் சோனியா காந்தி உத்தரவிட்டார். இதனிடையே, ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி பெற்றதால், காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்