கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்து - 5 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளது.
கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்து - 5 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
x
கடந்த 7 ஆம் தேதி, வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து இந்தியர்களை அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, விபத்துக்குள்ளானது. விபத்தில் இதுவரை  19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில், கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை ஆணையம் அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில்,
கேப்டன் எஸ்.எஸ். சாஹர் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு விசாரணை ஆணையம் செயல்படும் என்றும், 5 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை ஆணையம் தாக்கல் செய்யும் எனவும், விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்