எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்
பதிவு : ஆகஸ்ட் 11, 2020, 05:46 PM
எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கை குறித்த கோரிக்கை மனுவை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சார்பாக,டி.ஆர்.பாலுதன்னிடம் சமர்ப்பித்ததாக தமது டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். பயிற்று மொழியை தெரிவு செய்து கொள்வது, அந்தந்த மாநிலங்களின் உரிமை என்றும், புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்தும் டி.ஆர் பாலுவிடம் விளக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.  நாம் அனைவரும் ஒன்றுபட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.