துரித பரிசோதனை கருவிகள் கொள்முதல் விவகாரம் - 2 நிறுவனங்கள் கருவிகள் உற்பத்தி செய்ய அனுமதி

கொரோனா சோதனைக்கான துரித பரிசோதனை கருவிகளை உற்பத்தி செய்ய 18 நிறுவனங்கள் அனுமதி கோரிய நிலையில் 2 நிறுவனங்களுக்கு ஐ.சி.எம்.ஆர். அனுமதி வழங்கியுள்ளது.
துரித பரிசோதனை கருவிகள் கொள்முதல் விவகாரம் - 2 நிறுவனங்கள் கருவிகள் உற்பத்தி செய்ய அனுமதி
x
கொரோனா தொற்றுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பாற்றல் உருவாகி உள்ளதா என்பதை கண்டறியும் துரிதப் பரிசோதனை உபகரணங்களை உற்பத்தி செய்ய 18 நிறுவனங்கள் அனுமதி கோரி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் விண்ணப்பித்து உள்ளன. இதனை பரிசீலித்த ஐ.சி.எம்.ஆர். அமைப்பு இதுவரை 2  நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மற்ற விண்ணப்பங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஐ.சி.எம்.ஆர். அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  சளி மாதிரிகள் மூலம் உடலில் தொற்றின் மரபணு உள்ளதா என்பதை ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வின் மூலம் அறிய முடியும் என்றும், தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உடலில் உருவாகி உள்ளதாக  என்பதை ரத்த மாதிரிகளை கொண்டு தான் அறிந்து கொள்ள இயலும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்கான பரிசோதனைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், சீன நிறுவனங்கள் இதற்காக அனுப்பிய துரித பரிசோதனை உபகரணங்கள் தரமற்றவையாக இருந்ததால் அந்த பரிசோதனைகள்  பாதியில் நிறுத்தப்பட்டன.  

Next Story

மேலும் செய்திகள்