ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரின் ஜாமீன் மனு தள்ளுபடி - கொச்சி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் அதிரடி

கேரளா தங்கக் கடத்தலில் ஸ்வப்னா ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறி அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரின் ஜாமீன் மனு தள்ளுபடி - கொச்சி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் அதிரடி
x
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி விசாரணை வளையத்தில் உள்ள ஸ்வப்னா சுரேஷ், ஜாமீன் கோரி, கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கடத்தலின் போது தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டியை   கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் ஸ்வப்னா சுரேஷ் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

உபா சட்டத்தின் பல பிரிவுகள் இவ்வழக்கில் உள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.நாட்டின் பொருளாதார கட்டுப்பாட்டை சீர்குலைப்பதற்கான பயங்கரவாத செயல்பாடுகள் உள்ளதாக என்ஐஏ முன்வைத்த கருத்தையும் ஏற்றுக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த வழக்கில் கைதாகியுள்ள சந்தீப் நாயரின் ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
 


Next Story

மேலும் செய்திகள்