பாதுகாப்புத் துறையில் சுயசார்பு இந்தியா திட்டம் - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
x
இந்திய பாதுகாப்புத் துறைக்கான 101  பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், பாதுகாப்பு துறைக்கு  உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து தருவதற்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என  ராஜ்நாத் சிங் கூறினார்.
அரசு மற்றும் தனியார் துறை என பல்வேறு அமைப்புகளுடன் பல ஆலோசனைகளை நடத்தியதன் அடிப்படையில் 101 பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழலிலும் எதிர்காலத்திலும் தேவையான அளவு உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பொருட்கள் மட்டும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறினார். 2015 முதல் 2020 வரை 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்தகைய பொருட்களுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது, உள்ளூர் நிறுவனங்களுக்கு அளித்தால்,  6 முதல் 7 ஆண்டுகளுக்குள் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற முடியும் என தெரிவித்தார்.
101 பொருட்களில் துப்பாக்கிகள், ரேடார் கருவிகள், ஹெலிகாப்டர்களும் மற்றும் முக்கிய பொருட்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை 2024 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்