"தூய்மை இந்தியா - தொடர் இயக்கமாக செயல்படும்" - பிரதமர் நரேந்திர மோடி

தூய்மை இந்தியா இயக்கம் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் வகையிலான தேசிய தூய்மை மையத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
தூய்மை இந்தியா - தொடர் இயக்கமாக செயல்படும் - பிரதமர் நரேந்திர மோடி
x
தூய்மை இந்தியா இயக்கம் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் வகையிலான தேசிய தூய்மை மையத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பிரதமர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்... அப்போது, தமிழக மாணவர் ஒருவருக்கு, வணக்கம் தெரிவித்து கலந்துரையாடினார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முக கவசத்தை அணிய வேண்டும் என்று கூறினார். மகாத்மா காந்தி இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் வெளியேறு பிரசாரம் செய்தார் என்றும், நாம் இந்தியாவை விட்டு குழப்பங்கள் வெளியேற பிரசாரம் செய்வதாகவும் மோடி குறிப்பிட்டார். வட கிழக்கு இந்தியாவில் தூய்மை குறித்து அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்றும், இப்பகுதியில் தூய்மையின் பாரம்பரியம் உள்ளதாகவும் கூறிய மோடி, தூய்மை இந்தியா திட்டம் தொடர்ந்து வெற்றி பெற மாணவர்கள் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை தூய்மை குறித்து, பெரியவர்களுக்கு, மாணவர்களே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றும், தூய்மை இந்தியா திட்டத்தில் ஏற்பட்ட உணர்வு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மிகவும் பயனளித்து வருகிறது என்றும் பிரதமர்  மோடி தெரிவித்தார். தூய்மை இந்தியா திட்டம் ஒரு தொடர் இயக்கமாக செயல்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்