கேரளா விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு - 16 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடந்த விமான விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது.
கேரளா விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு - 16 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்
x
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடந்த விமான விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. தரையிறங்கும் போது தடுமாறிய விமானம், பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இன்னும் என்ன காத்திருக்கிறதோ... என நினைக்க வைத்திருக்கிறது, இந்த ஆண்டு...

நேற்று இரவு 8.45 மணி அளவில் வெளியானது அந்த அதிர்ச்சி செய்தி...  

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான விபத்து என்ற செய்தி ஒட்டு மொத்த நாட்டையும் உலுக்கியது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து 184 பயணிகள், 6 விமான பணிக்குழுவினர் என மொத்தம் 190 பேருடன், சிறப்பு விமானம் கரிப்பூர் வந்தது. 

ஓடு தளத்தில் முதலில் தரையிறங்கும் முயற்சி தோல்வி அடைந்தது.

2-வது முறையாக ஹார்ட் லேண்டிங் முறையில் முழு வேகத்தில் தரையிறங்கிய போது, ஓடுதளத்தை தாண்டி 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த உள்ளூர் மக்கள், என்டிஆர்எப் குழுவினர் இணைந்து, விமான இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.  

மீட்கப்பட்டவர்களில் சிலர், சுய நினைவின்றி இருப்பதாகவும், சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.  

சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

விபத்தை தொடர்ந்து, கோழிக்கோடுக்கு வந்த அனைத்து விமானங்களும் கண்ணூர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன. 

நாட்டிலேயே மிகவும் ஆபத்தான சாய்வுதள ஓடுதளம் கொண்ட மூன்று விமானநிலையங்களுள் கரிப்பூரும் ஒன்று. 

இந்த சாய்தள ஓடுதளங்களில் தரையிறக்க கூடுதல் திறமையும், அனுபவமும் தேவை என்று சொல்லப்படுகிறது. 

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானிக்கு போதிய அனுபவம் இருப்பினும், அங்கு நிலவிய மோசமான வானிலை கைகொடுக்காததால், இந்த விபத்து நடந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்