கோழிக்கோடு விமான விபத்து - விமானி உள்பட 18 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
x
கரிப்பூர் விமான நிலையத்தில் இரவு 7.38 மணிக்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில், விமானி தீபக் வசந்த் சாதேவும், துணை விமானி அகிலேஷ் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். 122 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, விமான விபத்தில் சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்