"எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு" - பிரதமர் மோடி
பதிவு : ஆகஸ்ட் 07, 2020, 01:26 PM
எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ், உயர் கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் பற்றிய மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு கல்லூரிகள், ஐ.ஐ.டி. - ஐ.ஐ.எம். - என்.ஐ.டி மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் பேசிய பிரதமர் மோடி, நமது பழைய கல்வித் திட்டம், எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என குறிப்பிட்டார். புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கும் போது எல்லாவற்றையும் ஆலோசித்ததாக தெரிவித்த அவர், மாணவர்களை உலக தரத்திற்கு மாற்ற வேண்டும் என்றும்,
எதிர்காலத்தை மனதில் கொண்டு இந்த புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.  வீட்டில் பேசும் மொழியிலேயே, கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், குழந்தைகளுக்கு அவர்களது தாய் மொழியிலேயே கல்வி கற்றுத் தர வேண்டும் என்பதும் இந்த கல்விக் கொள்கையில் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கல்வி கற்க, கேள்வி கேட்க ஊக்குவிப்பதாக இந்த கல்விக் கொள்கை அமையும் என்றும், மாணவர்களின் அறிவும் ஆர்வமும் இதன் மூலம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்த அவர், 
இடையில் கல்வியை விட்டவர்கள் மீண்டும் தொடர , இந்த புதிய கல்விக் கொள்கை வழி வகுப்பதாகவும் குறிப்பிட்டார். மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், சமுதாயத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாட்டை இந்த கல்விக் கொள்கை களையும் என்றும், பிரதமர் மோடி தெரிவித்தார். எப்படி உழைக்க வேண்டும் என்பதை புதிய கல்விக் கொள்கை கற்றுத்தரும் எனவும், சாமானியர்களுக்கு குறைந்த செலவில் உயர் தொழில்நுட்பத்தை கற்றுத் தரும் வகையில் இந்த கல்விக் கொள்கை அமையும் என தெரிவித்த மோடி,  வருங்கால சந்ததியினருக்கு இந்த கல்விக் கொள்கை உபயோகமாக இருக்கும் எனக் கூறினார்.  இறுதியில் புதிய கல்விக் கொள்கைக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

138 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

53 views

பிற செய்திகள்

"அரசியலில் குதிக்கிறார் பிகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே"

பீகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே அரசியலில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

271 views

பப்ஜி செயலிக்கான தடையை திரும்ப பெறப்போது இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்

இந்தியாவில் பப்ஜி செயலிக்கான தடையை திரும்ப பெறப்போது இல்லை மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருக்கிறது.

70 views

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தது

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த தொடர் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும், நீரின் அளவு நான்காயிரத்து 943 கன அடியாக குறைந்தது.

11 views

பாலிவுட் போதைப்பொருள் வழக்கு விசாரணை தீவிரம் - தீபிகா படுகோன் ஆஜர்

மும்பையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் ஆஜராகியுள்ளார்.

10 views

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த கேரள இளைஞர் - இந்தியா, ஈராக்கிற்கு எதிராக தாக்குதல் நடத்த சதிதிட்டம்

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து, இந்தியா, ஈராக்கிற்கு எதிராக தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டிய கேரள இளைஞரை குற்றவாளியென என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.