மகாராஷ்டிராவில் கொட்டித் தீர்க்கும் மழை - பொதுமக்களுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

மகாராஷ்டிர தலைநகர் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் கடந்த திங்கள் இரவு தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மகாராஷ்டிராவில் கொட்டித் தீர்க்கும் மழை - பொதுமக்களுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
x
மும்பையில், ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவாக,  33.18 சென்டி மீட்டர் மழை நேற்று கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் மும்பை வெள்ளத்தில் சிக்கித் திணறி வருகிறது. 

மகாராஷ்டிர தலைநகர் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் கடந்த திங்கள் இரவு தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மும்பை நகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. 

24 மணி நேரத்தில் கொலாபாவில் மட்டும் 33.18 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோன்று  சாந்தாகுரூஸில் 16.23 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

பலத்த காற்று வீசி வரும் நிலையில், பல இடங்களில் ஏற்கனவே மரங்கள், மின்கம்பங்கள் முற்றிலும் பிடுங்கி எறியப்பட்டு உள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதுடன், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. மும்பை நாயர் மற்றும் ஜே.ஜே.  மருத்துவமனைகளில் புகுந்த வெள்ள நீரை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

தொடர் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மஸ்ஜித் மற்றும் பாய்கலா புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்து தடைபட்ட நிலையில், அங்கு தவித்த 55 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

நான்கு மணி நேரத்தில் 30 சென்டிமீட்டர் மழை பெய்ததால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கொலாபா, நரிமன் பாயிண்ட், மரைன் டிரைவ் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர், பெட்டர் சாலையில் தடுப்புச் சுவ​ர் இடிந்த பகுதிகளையும் பார்வையிட்டு பணிகளை துரிதமாக செய்ய உத்தரவிட்டு உள்ளார். 

தெற்கு மும்பையில் பலத்த காற்று வீசிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. மும்பை பங்கு சந்தை பெயர் பலகையும், பலத்த காற்றில் சேதம் அடைந்துள்ளது. நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் உள்ள 9-ல் 3 கிரேன்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. 

கிர்காம் செளப்பட்டி மற்றும் ஓவல் மைதானம் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அந்த பகுதியில் உள்ள பல குடியிருப்புகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளது. 141 மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு​ உள்ள நிலையில்,  ரயில் பாதைகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளதால் சி.எஸ்.எம்.டி. மஸ்ஜித் இடையே ரயில் சேவை முடங்கி உள்ளது. 

இதனிடையே, வாட்லா பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த பூனைக்குட்டியை ஒருவர் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றார். ஆபத்து காலத்தில் விலங்குகளுக்கும் பரிவு காட்டிய அவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்