கேரளாவில் தீவிரகன மழைக்கு வாய்ப்பு - 2 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தீவிரகன மழைக்கு வாய்ப்பு - 2 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
x
கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. எர்ணாகுளம் முதல் காசர்கோடு வரை உள்ள மற்ற  வடக்கு மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் கனமழை தொடர்வதால் பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேப்பாடி புதுமாலா பகுதியில் நேற்று 39 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதேபோல, மேற்கு பனசுரா சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் 17.8 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கரப்புழா அணை திறக்கப்பட்டு உபரி  நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  கோழிக்கோட்டிலும் கன மழை தொடர்வதால்,  இருவஞ்சிபுழா மற்றும் சாலியார் நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு - நிலாம்பூர் - கூடலூர் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் பாயும் கலியார், தொடு புஜயார் மற்றும் கோத்தமங்கலம் நதிகளில் நீர்மட்டம் ​வெகுவாக உயர்ந்து வருகிறது. மூணாறில் இருந்து வண்டிப்பெரியார் வர பயன்படும் தற்காலிக  பாலம் நீரில் முழ்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும்,காற்றின் வேகம் 40 முதல்50 கி.மீ.வரை இருக்கும் என்பதால்,  மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது. நேற்று நான்கு என்.டி.ஆர்.எஃப்  குழுவினர் கேரளா வந்துள்ள நிலையில், இன்று 2 பிரிவுகள் வர உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்