"சுதந்திர தினத்திற்கு இணையான நாள்" - பிரதமர் மோடி

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய நாள், சுதந்திர தினத்திற்கு இணையாக கொண்டாடப்படும் நாள் என்றும்,இந்திய கலாசாரத்தின் நவீன சின்னமாக ராமர் கோவில் திகழும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்திற்கு இணையான நாள் - பிரதமர் மோடி
x
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய  பின், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,  ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்து கொண்டதை எனது பாக்கியமாக கருதுகிறேன் என்றும், ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவோம் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்கமாட்டார்கள் என்றார். இந்தியா முழுவதும்  ராம மயமாக இருக்கிறது என்றும் இந்த நாளில், நாடு முழுவதும் உணர்வுப் பூர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும் தெரிவித்தார். நாடு முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன என்றும், ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக கூறியுள்ளார். சுதந்திர போராட்டத்தில் மகாத்மாக காந்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் மக்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ, அவ்வளவு முக்கியத்துவம் ராமர்கோவிலுக்கு தருவதாக கூறினார். ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய நாள், சுதந்திர தினத்திற்கு இணையாக கொண்டாடப்படும் நாள் என்றும் சுட்டிக்காட்டினார். இந்திய கலாசாரத்தின் நவீன சின்னமாக ராமர் கோவில் திகழும் என கூறிய பிரதமர் மோடி, தொடர்ந்து ராமர் குறித்து புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, தமிழில் கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டி பெருமிதமாக பேசினார். 

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி : அடிக்கல் நாட்டு விழாவில், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு


அயோத்தி ராம ஜென்மபூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள், நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று ராமர்கோவில், கட்டுவற்கான பூமி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை 9.35 மணியளவில் விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து லக்னோ புறப்பட்டு, 11.30 மணிக்கு, லக்னோ வந்தடைந்தார். பின்னர் ஹெலிகாப்ர் மூலம் அயோத்தி வந்தடைந்த அவரை, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் வரவேற்றனர்.

அனுமன் கர்ஹி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு


அனுமன் கர்ஹி கோவிலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  அனுமனுக்கு தீபாராதனை காட்டி பிரதமர் வழிபாடு நடத்தினார். 

பாரிஜாத மரக்கன்றை, நட்டு வைத்த பிரதமர் மோடி...


ராமர் கோவில் வளாகத்திற்குள், பாரிஜாத மரக்கன்றை பிரதமர் நரேந்திர மோடி நட்டு வைத்தார். 

ராமர் கோவில், பூமி பூஜை விழா கோலாகலம் - அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி



ராமர் பிறந்த இடமாக கருதப்படும், அயோத்தியில், கோவில் கட்ட, பூமி பூஜை நடத்தப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று வேத மந்திரங்கள் முழங்க, ராமர் கோவில் கட்டுவதற்கான கல்லை எடுத்து வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டிய பிறகு பிரதமர் மோடி விழுந்து வணங்கினார். 


Next Story

மேலும் செய்திகள்