இலங்கையில் பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில் - சீதையை ராவணன் சிறை வைத்த இடம்
பதிவு : ஆகஸ்ட் 04, 2020, 01:57 PM
இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில்' பற்றிப் பார்க்கலாம்.
இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்திருக்கிறது நுவரெலியா மாவட்டம். சின்ன இங்கிலாந்து' என்று அழைக்கப்படும் இயற்கை வளம் நிறைந்த பகுதி இது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,900 அடி உயரத்தில் அடர்ந்த வனமும், தேயிலைத் தோட்டங்களுமாக பார்வைக்கு எட்டிய தொலைவுவரை பச்சைப் பசேல் என்று பசுமையாய் காட்சியளிக்கிறது.
இந்த மலைப்பகுதியில்தான், அசோகவனம் அமைந்திருக்கிறது. பெயருக்கு ஏற்றார் போலவே வனம் முழுக்க அசோக மரங்கள் நிறைந்திருக்கின்றன. இங்குதான் ராவணனால் புஷ்பக விமானம் மூலம் தூக்கி வரப்பட்ட சீதா தேவி சிறை வைக்கப்பட்டாள். அன்று ராவணனால் எந்த இடத்தில் சீதை சிறைவைக்கப்பட்டாளோ, அதே இடத்தில் பத்தினிக் கடவுளாக அருள்புரிகிறாள் சீதை. உள்ளூரில் இந்தக் கோயிலை ஆதிசக்தி சீதையம்மன் கோயில்' என்று அழைக்கிறார்கள். இங்கு அனுமனுக்கும் தனிச் சந்நிதி உண்டு.
சீதையம்மன் கோயில் அடர்ந்த வனத்தில் மலைச் சரிவில் காணப்படுகிறது. மலைக்கு மேலே உயரமான இடத்தில் கோயில் அமைந்துள்ளதால் எப்போதும் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. மலையைத் தழுவிச் செல்லும் கார்மேகம், மழை, எப்போதும் வீசிக்கொண்டிருக்கும் குளிர்ந்த காற்று, அருவி என இயற்கையின் ரம்மியமான சூழலில் அம்மனைத் தரிசிப்பது அலாதியான அனுபவத்தை தருகிறது. கோயிலுக்குள் நுழையும்போது ராவண அருவி மலையிலிருந்து விழுந்து காட்டாறாக ஓடிக்கொண்டிருக்கிறது. சீதையம்மன் கோயிலுக்குப் பின்பு விழும் சீதா அருவி' ராவண அருவியுடன் கலந்து ஓடுகிறது. இந்த ஆறு எப்போதும் வற்றுவது இல்லை என்று கூறுகிறார்கள். அசோகவனத்தில் சீதை சிறைவைக்கப்பட்ட காலத்தில் இந்த அருவியில்தான் தினமும் நீராடியதாக சொல்கிறார்கள். இந்த ஆற்று நீர் எந்தவித சுவையும் இல்லாமல் இருக்கிறது. அதற்கு சிறைவைக்கப்பட்ட சீதையின் கண்ணீர் மற்றும் அவளது சாபமே காரணம் என்று கூறுகிறார்கள். கோயில் மண்டபத்தில் ராமாயணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. கோயிலில் இரண்டு சந்நிதிகள் காணப்படுகின்றன. வலதுபுற சந்நிதியில் அனுமன் அருள்புரிகிறார். இடது பக்கம் காணப்படும் சந்நிதியில் சீதை தேவி ராமர் மற்றும் லட்சுமணனுடன் அருள்புரிகிறாள். ஆற்றங்கரையில் அனுமனிடம் சீதா தேவி கணையாழியைப் பெறுகிற காட்சி சிலையாக வடிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிலைக்குக் கீழே ஆற்றங்கரையில் காணப்படும் பாறைகளில் காலடி போன்ற இரண்டு பெரும் பள்ளங்கள் காணப்படுகிறது. அவை, அனுமனின் பாதத் தடங்கள் என்று கூறுகிறார்கள். சீதை சிறை வைக்கப்பட்ட இடத்திலேயே அவளை வணங்கினால் அனைத்து குறைகளும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டு பக்தர்களும் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

352 views

"நீட் தேர்வு முடிவுகள் வரும்16 ஆம் தேதி வெளியிடப்படும்" - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

174 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

142 views

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

128 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

43 views

பிற செய்திகள்

சுற்றுலாத்துறையில் ரூ.25,000 கோடி நஷ்டம் - கேரள முதலமைச்சர் தகவல்

கேரள மாநிலத்தில் 14 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 26 சுற்றுலா திட்டங்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

8 views

மாநில மொழிகளிலும் ஜே.இ.இ. தேர்வுகள் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

மாநில மொழிகளிலும் ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

36 views

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தகவல்

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி ராய் பி. தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

11 views

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 3 வீரர்கள் தரையிறங்கினர்

பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மூன்று விண்வெளி வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.

17 views

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு - 78 நாட்கள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும்

நாடு முழுவதும் உள்ள11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

109 views

"மீண்டும் எழுச்சி பெறும் வாசற்படியில் பொருளாதாரம்" - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேச்சு

கொரோனா தாக்கம் மற்றும் பொது முடக்கத்தினால் சரிவடைந்த பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறும் வாசற்படியில் இருக்கிறோம் என்று மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

184 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.