"ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் ரூ.2.90 லட்சம் கோடி" - தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஜூலை மாதத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் ரூ.2.90 லட்சம் கோடி - தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்
x
ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஜூலை மாதத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல் தொழில் நுட்பத் துறை  அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். ஊரடங்கு காரணமாக, வங்கிச் சேவைகள் பாதிப்பு மற்றும் ஏடிஎம் செல்ல அச்சம் காரணமாக பெரும்பாலானோர் ஆன்லைன் பரிவர்த்தனைகளை பயன்படுத்தினர். வர்த்தக நிறுவனங்களும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்கும் எண்ணத்திலும்  ஆன்லைன் பரிவர்த்தனையை தொடங்கினர். இதையடுத்து ஜூலை மாதத்தில் மட்டும் 149 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக  ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்