நாளை மறுநாள் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் - பிரதமரின் அயோத்தி பயண விவரம் வெளியீடு

நாளை மறுநாள் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ள நிலையில் பிரதமரின் பயண விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
நாளை மறுநாள் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் - பிரதமரின் அயோத்தி பயண விவரம் வெளியீடு
x
டெல்லி விமான நிலையத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு காலை 10.35 மணிக்கு லக்னோ விமான நிலையம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 10.40 மணிக்கு புறப்பட்டு, 11.30 மணிக்கு அயோத்தி சாகேத் மகா வித்யாலயாவில்  அமைக்கப்பட்டு உள்ள ஹெலிகாப்டர் தளத்தை வந்தடைகிறார்.பின்னர் அங்கிருந்து அனுமான்கடி கோயிலுக்கு 11.40 மணிக்குச் சென்று 15 நிமிடம் வழிபடுகிறார். இதனைத் தொடர்ந்து 11.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ராம ஜென்ம பூமிக்கு  நண்பகல் 12 மணிக்கு வந்து சேருகிறார் பிரதமர்.ராம் லல்லா விராஜ்மன் என்று அழைக்கப்படும் குழந்தை ராமரை வழிபட்டு பிரதமர் நரேந்திர மோடி பூஜை செய்கிறார்.பின்னர் அந்த வளாகத்தில் பாரிஜாத மரக்கன்றை பிரதமர் நடுகிறார்.12.30 மணிக்கு நடைபெறும் பூமி பூஜையில் பங்கேற்று, ராமர் கோயில் கட்டுமான திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுகிறார். ராமர் கோயில் பூமி பூஜையில் 5-ஆம் தேதி பங்கேற்க அயோத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி  சுமார் மூன்று மணி நேரம் அங்கு இருப்பார் என அதில் தெரிவக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்