செப். 10-ல் ஷாங்காய் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு - சீனா, பாகிஸ்தான் பங்கேற்பு என அறிவிப்பு

செப்டம்பர் 10 ஆம் தேதி ஷாங்காய் ஒத்து​ழைப்பு கூட்ட​மைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டுக்கு ரஷ்யா, கொரோனா தொற்றுக்கு முன்பு அழைப்பு விடுத்திருந்தது.
செப். 10-ல் ஷாங்காய் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு - சீனா, பாகிஸ்தான் பங்கேற்பு என அறிவிப்பு
x
செப்டம்பர் 10 ஆம் தேதி ஷாங்காய் ஒத்து​ழைப்பு கூட்ட​மைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டுக்கு ரஷ்யா, கொரோனா தொற்றுக்கு முன்பு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து சீனா மற்றும் பாகிஸ்தான் உறுதி செய்துள்ள நிலையில், இந்தியா பங்கேற்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. இதனிடையே அன்று மாலை பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ள நிலையில், ஆலோசித்து இந்தியா முடிவெடுக்கும் என கூறப்படுகிறது. ஒருவேளை இந்தியா பங்கேற்க முடிவு செய்யும் நிலையில், கால்வான் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பின்னர் இந்தியா, சீனா, பாகிஸ்தான் அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் முதல் நிகழ்வாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்