கொரோனா தடுப்பூசி - விரைவில் 2 -ஆம் கட்ட பரிசோதனை

கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை வரும் வாரங்களில் தொடங்கப்பட உள்ளது.
கொரோனா தடுப்பூசி - விரைவில் 2 -ஆம் கட்ட பரிசோதனை
x
கொரனோ வைரஸிடமிருந்து  காத்து கொள்ள  இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஆதரவுடன் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்ஸின் தடுப்பூசி இந்தியா முழுவதும் உள்ள 12 ஆராய்ச்சி, மையங்களில் விலங்குகளுக்கு அடுத்த படியாக மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொள்ள ஒப்புதல் அளித்தது. எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மற்றும் ஆரரய்ச்சி மையம் கடந்த சில வரரங்களுக்கு முன் இந்த ஆராய்ச்சியை துவங்கியது. நல்ல திடகாத்திரமான   18 வயது முதல் 55 வயதுடைய‌ நபர்களை கொண்டு முதல்கட்ட பரிசோதனை துவங்கியுள்ளதாக எஸ்ஆர்எம்
மருத்துவ கல்லூரி மற்றும் ஆரரய்ச்சி  முதன்மை ஆய்வாளர் மருத்துவர் சத்தியஜித் மகரோத்ர மற்றும் ஆரரய்ச்சி மையத்தின் மருந்தியல் இணை பேராசிரியர் டாக்டர் மெல்வின் ஜார்ஜ்  தெரிவித்தனர். இந்த முதல்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் தற்போது நல்ல ஆரோக்கிய நிலையில் இருப்பதாகவும், வரும் வாரங்களில், இரண்டாவது தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி கிடைத்துள்ளதால் ஒரு வாரங்களில் 12 வயது முதல் 65 வரை உள்ள 100 தன்னார்வலர்கள் இரண்டாம் கட்ட பரிசோதனை செய்யப்படும் என்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்