"ராமர் கோயிலை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம்" - ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள்

ராமர் கோவிலை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ராமர் கோயிலை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் - ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள்
x
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, ராமரின் வாழ்க்கை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது என ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சாவ்பால் தெரிவித்துள்ளார். ராமர் கோவில், சமுதாயத்தில் சகோதரத்துவத்துவம் , நல்லிணக்கத்தை வளர்க்கும் என அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடி, ஒரு தேசிய கதாநாயகன் என்றும், அவர் ராமராஜ்யத்தை நோக்கி நாட்டை வழி நடத்திச் செல்வார் எனவும் காமேஸ்வர் சாவ்பால் தெரிவித்துள்ளார்.  ராமஜென்மபூமி இயக்கத்துடன் மக்களை இணைத்த மாபெரும் ஆன்மா அத்வானி என்றும்,  மகாத்மா காந்தி கூட ராமர் பெயரை பயன்படுத்தியே தேசிய அரசியலுக்கு மக்களை திரட்டினார் என்றும் அவர் கூறியுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்