நாடு முழுவதும் 17.5 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினேழரை லட்சத்தை தாண்டி உள்ளது.
நாடு முழுவதும் 17.5 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
x
நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினேழரை லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த  24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு 54 ஆயிரத்து 736 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பானது, 17 லட்சத்து 50 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, 51 ஆயிரத்து 255 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 11 லட்சத்து 45 ஆயிரத்து 629 பேர் குணமடைந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. நேற்று மட்டும் 853 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5 லட்சத்து 67 ஆயிரத்து 730 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்