"பொருளாதார உறவுகளை துண்டிப்பது பாதிப்பை ஏற்படுத்தும்" - இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் கருத்து

இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை "கட்டாயமாக துண்டிப்பது" இரு நாடுகளையும் பாதிக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது.
பொருளாதார உறவுகளை துண்டிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் - இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் கருத்து
x
இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை "கட்டாயமாக துண்டிப்பது" இரு நாடுகளையும் பாதிக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது.  இது குறித்து பேசிய இந்தியாவுக்கான சீனத்தூதர்  சன் வெய்டாங், இது ஒரு அச்சுறுத்தல் அல்ல என்றும், ஒருவருக்கொருவர் இல்லாமல் நாம் வாழ முடியாது என்றும், பொதுவான கட்டமைப்பு மாறாமல் உள்ளதாகவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் - 3 வீரர்கள் மரணம்-5 பேர் படுகாயம் 

மணிப்பூர் மாநிலம் சந்தல் மாவட்டத்தில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.  பலத்த காயம் அடைந்த 5 வீரர்கள், இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் பீரன் சிங், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

சிகிச்சை அளிக்க மருத்துவமனை மறுப்பு - மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட இளைஞர் பலி

கர்நாடகாவில் படுக்கை வசதியை காரணம் காட்டி சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனையால், இளைஞர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குல்பர்கா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார். குல்பர்கா அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. எனினும், படுக்கை வசதியை காரணம் காட்டி, மூச்சு திணறலுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, பாதி வழியிலேயே இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண நோய்க்கு சிகிச்சை அளிக்க மறுத்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்த இளைஞரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


கொரோனா பாதிப்புக்குள்ளான முதியவர் உயிரிழப்பு - ஆக்சிஜன் முறையாக அளிக்கவில்லை என புகார்

கொரோனா பாதிப்புக்குள்ளான முதியவருக்கு, ஆம்புலன்ஸ் வாகனத்தில், ஆக்சிஜன் சரியாக செலுத்தாததால், உயிரிழந்ததாக உறவினர்கள், ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். 


பெங்களூரு நகரில் நேற்று மாலை 70 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. திடீரென்று அவருக்கு சுவாசக் கோளாறு பிரச்சினை ஏற்படவே முதியவரை 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உறவினர்கள் முடிவு செய்தனர். யோகேஷ் என்ற 33 வயது நபர் ஓட்டி வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் முதியவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவரது உறவினர்களும் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தனர். தனியார் மருத்துவமனையை வந்த போது முதியவர் உயிரிழந்திருந்தார். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆக்சிஜன் செலுத்தாததால்  உயிரிழந்ததாக, குற்றம் சாட்டி ஓட்டுனர் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், ஓட்டுனரை, மீட்டனர். கர்நாடகாவில்  மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.


இரண்டு சிறுமிகள் கூட்டு பலாத்காரம்  - செல்போனில் படம் எடுத்து மிரட்டிய கும்பல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த 11 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கூட்டு பாலியல் வன்கொடுமையை செல்போனில் படம்பிடித்து, 2 சிறுமிகளை தொடர்ந்து அந்த கும்பல் மிரட்டியுள்ளது. பலோடாபஜார் பகுதியை சேர்ந்த 2 சிறுமிகள் கடந்த மே மாதம் ஆண் நண்பர்களுடன் வெளியே சென்ற போது, இந்த கொடூரச் சம்பவம் நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 


தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் - பெண்ணை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை 

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில், முதல் மாடி ஜன்னலில் இருந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை, தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். விசாரணையில், அந்த பெண் ஒரு மனநோயாளி என்பது தெரியவந்துள்ளது. 


தொடர் மழையின் காரணமாக திடீர்  நிலச்சரிவு - தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

வட மாநிலங்களில், பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசம், அசாம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழையால், பல இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், சமோலியில், தொடர் மழை காரணமாக திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில், வாகன நெரிசல் ஏற்பட்டது. சரிந்து விழுந்த மண்ணை, அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த கேரள அரசு அனுமதி - சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை

கேரளாவின் பல்வேறு இடங்களில், ஏராளமான இஸ்லாமியர்கள், சமூக இடைவெளியுடன், பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கேரளாவில் உள்ள மசூதிகளில், சமூக இடைவெளி மற்றும் கொரோனாவிலிருந்து காக்கும் நடவடிக்கைகளுடன், தொழுகை நடத்த அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள், பக்ரீத் சிறப்பு தொழுகைளை சமூக இடைவெளியுடன் நடத்தி முடித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்