ஓரினச் சேர்க்கையால் மனைவியை தவிர்த்த இளைஞன் - புதுமாப்பிள்ளை மீது காவல்நிலையத்தில் புகார் - வழக்குப்பதிவு
பதிவு : ஜூலை 31, 2020, 09:22 AM
இளைஞரின் ஓரினச் சேர்க்கை உறவு முறை தெரியாமல் நடந்த திருமணத்தால் இளம்பெண் ஒருவரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. ஆந்திராவில் நடந்த இந்த சம்பவத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
ஆந்திர  மாநிலம் குண்டூர்  மாவட்டத்தைச்  சேர்ந்த 30 வயதான இளைஞர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கேயே வேலை பார்த்து வந்துள்ளார். 
இந்த நிலையில், சொந்த ஊருக்கு வந்த மகனுக்கு அவருடைய பெற்றோர் பெண் பார்த்தனர். ஊரடங்கு நேரத்தில் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டு நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்
25 வயது இளம்பெண் ஒருவருடன் திருமணமும் நடந்துள்ளது. அப்போது பெண் வீட்டார் 50 லட்ச ரூபாய் ரொக்கப்பணம், 70 சவரன் நகை என ஆடம்பரமாக மகள் திருமணத்தை நடத்தி முடித்தனர்.பல்வேறு கனவுகளுடன் தன் வாழ்க்கையை துவங்க திட்டமிட்டு இருந்தார் அந்த இளம்பெண். ஆனால், முதலிரவு அன்று மனைவியை நெருங்காமல் தனக்கு உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி தவிர்த்துள்ளார் அந்த அமெரிக்க மாப்பிள்ளை.
ஆனாலும் கூட கணவரின் நிலையை அறிந்து எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார் அந்த பெண். அடுத்தடுத்த இரவுகளிலும், அடுக்கடுக்காய்
கதை சொல்லி வந்த மாப்பிள்ளை மீது பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
புதுமாப்பிள்ளைக்கு என்னதான் பிரச்சினை என்று புரியாமல் குழம்பித் தவித்த அந்த இளம்பெண், கடைசியில் தன் தோழிகளிடம் சொல்லவே அவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த விஷயம் பெண்ணின் பெற்றோரின் கவனத்திற்கு சென்றது. அமெரிக்க மாப்பிள்ளையுடன் மகளுக்கு வாழ்க்கை என்ற மகிழ்ச்சியில் இருந்த அவர்களுக்கு பேரிடியாய் வந்து சேர்ந்தது அந்த செய்தி. அமெரிக்க மாப்பிள்ளையை கூப்பிட்டு விசாரித்ததில்,
ஆரம்பத்தில் மழுப்பிய அவர், ஒருகட்டத்தில், உண்மையை ஒப்புக் கொண்டார். அமெரிக்காவில் வசித்து வந்த அவருக்கு அங்குள்ள இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது ஓரினச்சேர்க்கையாக மாறியுள்ளது. அங்கு இருவரும் மனமொத்து வாழ்க்கை நடத்தி வருவதாகவும், தனக்கு பெண்ணுடன் நடந்த திருமணத்தில் ஆர்வம் இல்லை என கூறியதை கேட்டு இரு குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். ஏமாற்றி திருமணம் செய்து  கொண்டதாக பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில்  இளைஞரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அமெரிக்க மாப்பிள்ளை மோகம்.. அவசர கதியிலான திருமணம்… இதெல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டது.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

408 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

390 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

106 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 views

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

25 views

பிற செய்திகள்

புதுச்சேரி கல்வி அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கமலக்கண்ணன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

19 views

கொரோனாவில் இருந்து மீண்ட கர்நாடகா முதல்வர் எடியூரப்பா - விரைவில் பணிக்கு திரும்புவேன் என டிவிட்டர் பதிவு

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். கடந்த 2ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட எடியூரப்பா , பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

16 views

"பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை நிறுவி 11 ஆண்டுகள் நிறைவு" - வள்ளுவர் சிலைக்கு கர்நாடக துணை முதல்வர் அசோக் நாராயண் மரியாதை

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை நிறுவி 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, கர்நாடக துணை முதல்வர் அசோக் நாராயண், வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

33 views

பயணிகள் ரயில் சேவை எப்போது? - ஆக.13 முதல் ரயில் சேவை தொடங்குமா?

ரயில் சேவை ஆகஸ்ட் 12 வரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 13 முதல் ரயில் சேவை துவங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

844 views

6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - பருவமழை, வெள்ள அபாயம் குறித்து விவாதம்

தென்மேற்கு பருவமழை மற்றும் தற்போதைய வெள்ள சூழ்நிலை குறித்து அசாம், பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரள மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

27 views

ராகுல்காந்தி உடன் சச்சின் பைலட் சந்திப்பு - காங்கிரஸ் கட்சிக்காக தொடர்ந்து பணியாற்ற உறுதி

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள, சச்சின் பைலட் ராகுல்காந்தியை சந்தித்து விளக்கமளித்தார்.

142 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.