16 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை - வளர்ப்பு தந்தையை கைது செய்த போலீசார்
பதிவு : ஜூலை 29, 2020, 01:05 PM
புதுச்சேரியில் வளர்ப்பு மகளுக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுத்ததுடன் அந்தரங்க இடங்களில் இரும்பு கம்பியால் சூடு வைத்து சித்ரவதை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் உடலில் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் 16 வயது சிறுமி. உடலின் அந்தரங்க இடங்களில் பலத்த காயங்கள் இருந்ததால் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது தான் சிறுமிக்கு நடந்த அந்த பயங்கரம் வெளியே தெரிந்தது. கணவனை இழந்த நிலையில் சிறுமியின் தாய், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டட தொழில் செய்யும் ஒருவரை திருமணம் செய்துள்ளார். 

இவர்களுக்கு அடுத்தடுத்து 3 குழந்தைகள் பிறந்த நிலையில் முதல் கணவருக்கு பிறந்த மகள் என 4 பிள்ளைகளையும் வளர்த்து வந்துள்ளார் அந்த பெண். இதனிடையே முதல் கணவருக்கு பிறந்த சிறுமிக்கு வளர்ப்பு தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்த அவர், சொல்லவே கூசும் அளவுக்கு சித்ரவதைகளையும் செய்து வந்துள்ளார். தாயிடம் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியே சிறுமியை சீரழித்து வந்துள்ளார் அந்த கொடூர தந்தை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை மீண்டும் பலவந்தப்படுத்தி அழைத்து வந்து தன்  வேலையை காட்டியுள்ளார் அவர். அதுமட்டுமின்றி தனக்கு பிறந்த 3 பெண்களையும் கட்டி வைத்து அடித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ந்து போன மூத்த பெண், தன் வளர்ப்பு தந்தையை தட்டிக் கேட்கவே, பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால் சூடு வைத்தும், கையை உடைத்தும் தன் கோர முகத்தை காட்டியிருக்கிறார். வீட்டில் மயங்கி கிடந்த சிறுமியை மீட்ட தாய், பதறிப்போய் மருத்துவமனையில் சேர்த்தபிறகு தான் இந்த கொடூரங்கள் அனைத்தும் தெரியவந்தது. இதையடுத்து கொடூரமான அந்த தந்தை மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2977 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

1665 views

"சாமானிய மக்களுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா" - அமைச்சர் சரோஜா தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதியவர்களுக்கான உதவித் தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

325 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

254 views

பிற செய்திகள்

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி - விரைவில் 2 -ஆம் கட்ட பரிசோதனை

கோவாக்ஸின் தடுப்பூசியின், இரண்டாம் கட்ட பரிசோதனை வரும் வாரங்களில் தொடங்கப்பட உள்ளது.

3 views

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் - மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

புதுச்சேரியில் ஆட்சி அமைத்திடும் சூழலை உருவாக்குவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

252 views

அனுமான் கடி கோயிலில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் சாமி தரிசனம்

அயோத்தியில் உள்ள அனுமான் கடி கோயிலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் செய்தார்.

11 views

"ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் ரூ.2.90 லட்சம் கோடி" - தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஜூலை மாதத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

190 views

மோடி தலைமையில் ராம் ராஜ்யம் அமையும் என்ற நம்பிக்கை வந்துள்ளது - ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

பிரதமர் மோடி ஆட்சியின் கீழ், இந்தியாவில் ராம ராஜ்யம் அமையும் என்ற நம்பிக்கை தமக்கு வந்துள்ளதாக ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

6 views

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 பேருக்கு கொரோனா தொற்று.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்து 972 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.