இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் - செல்போனில் பதிவான பரபரப்பான விநாடிகள்
பதிவு : ஜூலை 29, 2020, 08:47 AM
பெங்களூரு காந்திநகர் பகுதியில் பழமையான கட்டிடம் ஒன்று மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது.
பெங்களூரு காந்திநகர் பகுதியில், பழமையான கட்டிடம் ஒன்று மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது. இதன் அருகிலேயே புதிய கட்டுமானப் பணி ஒன்று நடைபெற்று வரும் நிலையில், பழைய கட்டிடத்தின் அடிப்பகுதியிலிருந்து நேற்று மாலை மண் சரிவு ஏற்பட்டு கட்டிடம் சரிய தொடங்கியது. தகவல் அறிந்து, போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோதே நான்கு அடுக்கு கட்டிடம் முழுமையாக சரிந்து விழுந்து தூள் தூளானது. அதிர்ஷ்டவசமாக கட்டிடத்தில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பான காட்சிகள் இதோ....

கேரளாவில் மேலும் 1167 பேருக்கு கொரோனா - அமைச்சர் இல்ல ஊழியருக்கு கொரோனா

கேரளாவில் மேலும் 1,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 894 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்த கேரள முதலமைச்சர் பினரயி விஜயன், கேரளா தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்  இல்லத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என உறுதியானதாகவும் தெரிவித்தார். 

ஒரே நாளில் 7,948 பேருக்கு கொரோனா - மேலும் 58 பேர் உயிரிழப்பு 

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 948 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுய உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 297 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும் 58 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 148 ஆக உயர்ந்து உள்ளது. 56 ஆயிரத்து 527 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊரடங்கால் தவித்து வரும் ரஷ்ய பெண் - 4 மாதங்களாக திருப்பதியில் தவிப்பு

ஊரடங்கு நடைமுறை காரணமாக ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் திருப்பதியில், 4 மாதங்களாக தவித்து வருகிறார். ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக ரஷ்யாவை சேர்ந்த தாய், மகள் கடந்த மார்ச் மாதம் திருப்பதி வந்துள்ளனர். தாய் ஒலிவியா பல்வேறு முயற்சிகளுக்கு பின் மேற்கு வங்கம் சென்ற நிலையில், மகள் இஸ்டர் திருப்பதியில் தவித்து வருகிறார். கடந்த நாட்களில் பணம் கையிருப்பு குறைந்த நிலையில், சிறிய ஹோட்டலில் அவர் தங்கியுள்ளார். இந்நிலையில் இதனை அறிந்த திருப்பதி எம்.எல்.ஏ
கருணாகர ரெட்டி தாய், மகள் இருவரையும் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார். 

"தேர்தல் குறித்து பிற அமைப்புகள் கருத்து தெரிவிக்க கூடாது" - இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை

தேர்தல் நடத்துவது தொடர்பாக தங்களை தவிர பிற அமைப்புகள் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தேர்தல் குறித்து முடிவெடுக்கும் போது பாதுகாப்பு , நோய் பரவல் போன்றவற்றை ஆய்வு செய்த பின்னரே அறிவிப்புகள் வெளியாகும் எனவும் பிற அமைப்புகள் தேர்தல் பற்றி கருத்து தெரிவிப்பது , தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தில் தலையிடுவது போன்றது எனவும் குறிப்பிட்டுள்ளது. 

மேற்கு வங்கத்தில் ஆக. 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். வாரத்தில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பக்ரீத் பண்டிகையையொட்டி, ஆகஸ்ட் 1ஆம் தேதி மட்டும் ஊரடங்கு இல்லை எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஒரு லைன், ஒரு ட்வீட், இவ்வளவு பெரிய புயலா? - நடிகை குஷ்புவின் கருத்தால் காங்கிரஸில் சலசலப்பு

தான் யாருக்கும் தலையாட்டும் ரோபாவாக இருக்க மாட்டேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.

1296 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

345 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

158 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

18 views

பிற செய்திகள்

ராமர் கோயில் கட்டும் கனவு நிறைவேறியுள்ளது - எல்.கே.அத்வானி

1990ஆம் ஆண்டில், ராமஜன்ம பூமி இயக்கத்தின் போது, ​​ராம ரத யாத்திரை வடிவத்தில் முக்கிய கடமையை செய்து, அதன் மூலம் எண்ணற்றவர்களை ஒருங்கிணைக்க உதவியதை நினைத்து பெருமிதம் கொள்வதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

520 views

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

48 views

மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - அலறியடித்து ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த அச்சுதாபுரத்தில் மருத்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

8 views

"அயோத்தியில் ராமர் கோவில் : "தேசிய ஒற்றுமை நிகழ்வாக மாறியுள்ளது" - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா

எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.

2579 views

ஒரே நாளில் 52,050 பேருக்கு தொற்று உறுதி - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

நாட்டில் ஒரே நாளில் 52 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

16 views

இலங்கையில் பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில் - சீதையை ராவணன் சிறை வைத்த இடம்

இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில்' பற்றிப் பார்க்கலாம்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.