ரஃபேல் விமானங்கள் நாளை இந்தியா வருகை

ஃபிரான்ஸிடம் இருந்து வாங்கப்பட்ட, ரஃபேல் போர் விமானங்கள் நாளை விமானப்படையில் இணைக்கப்பட உள்ளன.
ரஃபேல் விமானங்கள் நாளை இந்தியா வருகை
x
ஃபிரான்ஸிடம் இருந்து வாங்கப்பட்ட, ரஃபேல் போர் விமானங்கள்  நாளை விமானப்படையில் இணைக்கப்பட உள்ளன. இந்திய விமானிகளே ரஃபேல் விமானத்தை இயக்கி, நம் நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.
 பிரான்ஸ் நாட்டின் டசால்ட்  விமான நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக விமானங்களை வா​ங்குவதற்கான ஒப்பந்தம், 2016ம் ஆண்டு கையெழுத்தானது.  கடந்த மே மாதம் ரஃபேல் விமானங்கள் இந்தியா வரவிருந்த நிலையில் , கொரோனா ஊரடங்கால் தாமதமானது. இதனிடையே முதல்கட்டமாக அதிநவீன 5 ரஃபேல் போர் விமானங்கள், நேற்று பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன.  ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானிகளே இயக்கிக் கொண்டு இந்தியா வருகிறார்கள். சுமார் 7,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து இந்தியா வரும் ரஃபேல் விமானங்கள், பயணத்திற்கிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறங்கி, பின் புறப்பட்டன. வழியில் வேறு எங்கும் நிறுத்தப்படாத இந்த விமானங்களுக்கு வான்வெளியிலேயே எரிபொருளும் நிரப்பப்படுகிறது. ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் 5 ரஃபேல் விமானங்களும் நாளை ஒப்படைக்கப்பட உள்ளன. உலகின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான ரஃபேலின் வருகை இந்திய விமானப்படைக்கு மேலும் பலம் சேர்க்கும் என பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்