3 ஆண்டுகளாக மகளை பலாத்காரம் செய்த தந்தை - போக்சோ சட்டத்தில் கைது - போலீஸ் விசாரணை
பதிவு : ஜூலை 28, 2020, 09:39 AM
புதுச்சேரியில்16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உடலில் பலத்த காயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். காயங்களை பார்த்து, சந்தேகமடைந்த மருத்துவர்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, காயமடைந்த மாணவி மற்றும் அவரின் தாயிடம் நடத்திய விசாரணையில், சிறுமியின் தாய் 2-வது திருமணம் செய்து கொண்டதும், அவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. மேலும், முதல் கணவருக்கு பிறந்த அந்த சிறுமியை, தாய்க்கு தெரியாமல் 3 ஆண்டுகளாக 2 வது கணவர், பாலியல் வல்லுறவு செய்ததும் தெரியவந்தது. சிறுமியை கட்டி வைத்து கையை உடைத்தும், அந்தரங்க இடங்களில் சூடு வைத்தும், தலையில் அடித்தும் காயம் ஏற்படுத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து, உடனடியாக, தாயின் 2-வது கணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அந்தக் காமக் கொடூரன், தனக்கு பிறந்த 3 மகள்களையும் கொடுமைக்குள்ளாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

337 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

139 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

13 views

பிற செய்திகள்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

36 views

மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - அலறியடித்து ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த அச்சுதாபுரத்தில் மருத்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

7 views

"அயோத்தியில் ராமர் கோவில் : "தேசிய ஒற்றுமை நிகழ்வாக மாறியுள்ளது" - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா

எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.

2471 views

ஒரே நாளில் 52,050 பேருக்கு தொற்று உறுதி - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

நாட்டில் ஒரே நாளில் 52 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

16 views

இலங்கையில் பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில் - சீதையை ராவணன் சிறை வைத்த இடம்

இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில்' பற்றிப் பார்க்கலாம்.

23 views

தங்க கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் - தூதரக வாகனத்தை கைப்பற்ற நடவடிக்கை

திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரத்தில் விமான நிலையத்தில் இருந்து தங்கம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.