கொரோனா தொற்றுக்கான உயர்பரிசோதனை வசதிகள் - பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்

கொரோனா தொற்றுக்கான உயர் பரிசோதனை வசதிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
கொரோனா தொற்றுக்கான உயர்பரிசோதனை வசதிகள் - பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்
x
நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சகட்டத்தை அடைந்துவிட்ட நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், கொரோனாவுக்கான உயர்பரிசோதனை வசதிகளை பிரதமர் மோடி  காணொலி  காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த வசதிகள் நாட்டின் பரிசோதனைத் திறனை அதிகரிப்பதுடன், நோயை ஆரம்பத்திலேயே  கண்டறிந்து, சிகிச்சை பெற உதவும் என்பதால்,
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் இந்த உயர் உற்பத்தி பரிசோதனை வசதிகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் நாளொன்றுக்கு 10,000 மாதிரிகளைச் சோதிக்க முடியும். கொரோனா தவிர, ஹெபடிடிஸ் பி மற்றும் சி, எச்ஐவி, காசநோய், டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கான சோதனைகளையும் மேற்கொள்ள முடியும்

Next Story

மேலும் செய்திகள்