பொதுத்தேர்வில் 490 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவியுடன், பிரதமர் கலந்துரையாடல்
பதிவு : ஜூலை 26, 2020, 03:33 PM
கடினமான குடும்ப சூழலிலும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், நாமக்கல்லை சேர்ந்த கனிகா என்ற மாணவியுடன், பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, நாமக்கல் பற்றி கேள்விப்படும்போது எனக்கு நினைவுக்கு வருவது மிகப் பெரிய ஆஞ்சநேயர் கோயில் தான் என பிரதமர் கூறினார். ஆனால், தற்போது நாமக்கல் என்று சொல்லும்போது மாணவி கனிகாவின் பெயரும் நினைவுக்கு வருவதாக அவர் தெரிவித்தார். அப்போது பேசிய மாணவி கனிகா, தேர்வில் 486 மதிப்பெண்கள் மட்டுமே எடுப்பேன் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது 490 மதிப்பெண்கள் பெற்று இருப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மாணவி கனிகாவின் தந்தை ஓட்டுநராக பணிபுரியும் நிலையில், கனிகாவின் சகோதரி மருத்துவ படிப்பு படித்து வருவதாகவும் தெரிவித்தார். இது போன்ற கடினமான சூழலிலும் சாதிக்கக் கூடிய ஏராளமான மாணவர்கள் நமது நாட்டில் இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, இது போன்று மற்றவர்களுக்கு முன்மாதிரியாக புத்துணர்ச்சி அளிக்க கூடிய கதைகளை அதிகளவில் மற்றவர்களுக்கு பகிரும் படி இளைஞர்களை கேட்டுக்கொண்டார்.


தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

280 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

262 views

பிற செய்திகள்

கொரோனா பணி, தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் டிவிட்டர் பதிவு

கொரோனா காலத்தில் தமிழகத்தில் பல மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

354 views

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

127 views

காமராஜர் பல்கலை. தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு

விடைத்தாள் திருத்தும் போது தலா 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்குமாறு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு துணை வேந்தர் பரிந்துரைத்துள்ளார்.

19 views

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நிதியுதவி

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

243 views

ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் பறிபோன உயிர் - பூக்கடை வியாபாரி மன உளைச்சலால் தற்கொலை

ஊரடங்கால் போதிய வருமானமின்றி தவித்து வந்த பூக்கடை வியாபாரி ஒருவர் திருச்செந்தூரில் தற்கொலை செய்து கொண்டார்.

803 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.