இமாச்சலபிரதேசம் சிம்லாவில் மண்சரிவால் பழச்சந்தை மூடல்

இமாச்சலபிரதேசம் சிம்லாவில் நிலச்சரிவு காரணமாக பழச்சந்தை மூடப்பட்டது.
இமாச்சலபிரதேசம் சிம்லாவில் மண்சரிவால் பழச்சந்தை மூடல்
x

இமாச்சலபிரதேசம் சிம்லாவில் நிலச்சரிவு காரணமாக பழச்சந்தை மூடப்பட்டது. இதனால் வியாபாரிகள் மற்றும் பழ சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மண்சரிவால் பல லட்சம் மதிப்புள்ள பழங்கள் வீணாகியதால், தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சந்தையில் மலைபோல் குவிந்து கிடக்கும் பாறைகள், மண்ணை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

ஓய்வு நேரத்தில் பாடம் கற்று தரும் காவல்துறையினர்...காவல்துறை அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டு

மத்திய பிரதேசமாநிலம், இந்தோரில், காவல்துறை அதிகாரிகள், ஓய்வு நேரத்தில், ஏழை, மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓய்வு நேரத்தில் பாடம் சொல்லிக்கொடுக்கும் காவல்துறையினருக்கு, பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

பெட்ரோலிய அமைச்சருக்கு 'அல்வா' அனுப்பிய லாரி உரிமையாளர்கள்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அல்வா அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வில்லை என்று கூறிய அவர்கள், ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவில்லை என்றும் குற்றம் சாட்டினர். தாங்களே அல்வா தயாரிப்பில் ஈடுபட்ட அவர்கள், உடனடியாக பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்குமாறும், மீண்டும் மீண்டும் ஏமாற்ற வேண்டாம் என்றும் கூறி அல்வாவை அனுப்பி வைத்தனர்.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்புப்படை - காசிரங்கா தேசிய பூங்காவையும் மூழ்கடித்துள்ள வெள்ளம் 

கனமழையால் பாதிக்கப்பட்ட பீகார் மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை, தேசிய பேரிடர் மீட்புப்படை, வீடுகளில் இருந்து மீட்டு,  பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியது. தர்பங்கா மாவட்டத்தில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை படகுகளைப் பயன்படுத்தி மீட்ட
மீட்பு படையினர், தற்காலிக கூடாரங்களில் தங்க வைத்துள்ளனர். பிரபலமான காசிரங்கா தேசிய பூங்காவையும் வெள்ளம் மூழ்கடித்துள்ளது.இந்த வெள்ளத்தால் 2 ஆயிரத்து 500 மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  3,000 விலங்குகளும்
பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனிடையே வெள்ளத்தால்,  மக்கள் இடம்பெயர்ந்துள்ளதால், கொரோனா தொற்று பரவல்
அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் - கர்ப்பிணியை தோளில் சுமந்த சென்ற குடும்பம் 


தெலங்கானா மாநிலம் பத்ராத்ரிகொத்தகூடம் அருகே, பெருக்கெடுத்து ஓடும் நீரில்,கர்ப்பிணியை தோளில் சுமந்தபடி குடும்பத்தினர் கரையை கடந்தனர். தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், ஒவ்வொரு முறையும் மழைக்காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகுவதாக வேதனை தெரிவித்த கிராமமக்கள், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு பயன்படும் வகையில் நிரந்தர பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

பாகமதி நதியில் வெள்ளப்பெருக்கு - நீரில் மூழ்கிய பல்வேறு கிராமங்கள் 

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையோரத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ள நீர் வடியும் வரை, தங்களுக்கு தற்காலிக முகாம் அமைத்து தருவதோடு, உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்