நகைக்கடையில் 7 கிலோ தங்கம், ரூ.30 லட்சம் கொள்ளை - 6 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்

நகைக்கடை ஒன்றில், 7 கிலோ நகை மற்றும் 30 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 மணி நேரத்தில், கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
நகைக்கடையில் 7 கிலோ தங்கம், ரூ.30 லட்சம் கொள்ளை - 6 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்
x
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர், அங்கிருந்த ஊழியரை கட்டிப் போட்டிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து, கடை உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 7 கிலோ தங்க நகைகள் மற்றும் 30 லட்சம் ரொக்கம் கொள்ளை போனதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விஜயவாடாவில் இருந்து, வெளியூர்களுக்கு செல்லும் வாகனங்களை சோதனையிட்ட போலீசார்,  நகைகளை கொள்ளையடித்த ராஜஸ்தானை சேர்ந்த 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே, கொள்ளை நடந்த போது, கடையில் இருந்த ஊழியர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதால், அவருக்கும் கொள்ளையில் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்