பெருகி வரும் யூ டியூப் சேனல்கள் - வருமானமும் கிடைப்பதால் எல்லா தரப்பினரும் ஆர்வம்

எந்த முதலீடும் இல்லாமல் எல்லோரையும் தனக்கென ஒரே சேனலையே உருவாக்கிக்கொள்ள உதவி செய்கிறது, யூ டியூப் நிறுவனம், அது குறித்த செய்தித்தொகுப்பை இப்போது பார்ப்போம்
பெருகி வரும் யூ டியூப் சேனல்கள் - வருமானமும் கிடைப்பதால் எல்லா தரப்பினரும் ஆர்வம்
x
ஒரு ஸ்மார்ட் போன், ஒரு எடிட்டிங் ஆப், ஒரு ஜி மெயில் கணக்கு, கொஞ்சம் போல ஆர்வம் இருந்தால் போதும் யூ டியூட் சேனல் தொடங்கி விடலாம் என்பது தான் இன்றைய எதார்த்தம். 

அழகான தலைப்புகளுடன் தனக்கு தெரிந்த விஷயங்களை சுவாரஸ்யமாக கொடுத்தால் போதும் நம்முடையே யூடியுப் சேனல் எல்லோராலும் விரும்பப்படும்

பள்ளிக்குழந்தைகள், இல்லத்தரசிகள், பாட்டி தாத்தாக்கள் என பல்வேறு தரப்பினரும், தங்களது திறமைகளை யூடியூப் வழியாக வெளிகாட்டி வருகின்றனர்,

வெளியே தலை காட்டாத நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும், ஊரடங்கு காலத்தில் தனக்கென ஒரு சேனலை உருவாக்கி கலக்கி வருகின்றனர்
தொலைக்காட்சிகளைப் போல பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் ஆர்வமும் ஸ்மார்ட் போனும் இருந்தாலே நமக்கான சேனலை நொடி பொழுதில் உருவாக்கிவிட முடியும் என்கிறார் யூ டியூப் பதிவர் ஸ்வரா வைத்தி

ஒருவரின்  வீடியோ அதிகப்படியான பார்வையாளர்களைச் சென்றடையும் போது வருமானம் வரத் தொடங்குகிறது.  பொழுது போக்காக வீடியோக்களை பதிவிட்ட சிலர் தற்போது லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டிவரும் நிலையும் தற்பது உள்ளது 

யார் மனதையும் பாதிக்காத வகையில், நல்ல விஷயங்களை பதிவிடும் போது பார்வையாளர்கள் எண்ணிக்கை உச்சத்தை தொடும், அதே சமயம் சர்ச்சைக்குறிய விஷயங்களை பதிவு செய்தவர்கள் மீது வழக்குகள் பாயும் நிலையும் சமீப காலங்களில் நிகழ்ந்து வருகிறது சமூக ஊடகம் என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி. அதை எப்படி லாவகமாக கையாள்கிறோம் என்பதில் தான் சூட்சமம் அடங்கியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்