அக்கரை செல்ல முயற்சி செய்த குடம் வியாபாரி - வெள்ளத்தில் மூழ்கிய பரிதாபம்

கர்நாடகாவில் வெள்ளத்தில் அக்கரைக்கு செல்ல முயன்ற வியாபாரி வாகனத்தோடு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி வெளியாகி உள்ளது.
அக்கரை செல்ல முயற்சி செய்த குடம் வியாபாரி - வெள்ளத்தில் மூழ்கிய பரிதாபம்
x
கர்நாடகாவில் வெள்ளத்தில் அக்கரைக்கு செல்ல முயன்ற வியாபாரி வாகனத்தோடு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி வெளியாகி உள்ளது. கல்புர்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மூகா கிராமத்தில் உள்ள ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தரைப்பாலத்தை தாண்டி ஓடும் வெள்ளத்தில் ஆபத்தை உணராத குடம் வியாபாரி ஒருவர் அக்கரை செல்ல முயன்றார். ஆனால், வெள்ளத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்த அவரை, இருசக்கர வாகனத்தோடு இழுத்துச் சென்றது. ஏதும் செய்ய முடியாத நிலையில், தண்ணீரோடு பரிதாபமாக இழுத்துச் சென்ற பதைபதைக்கும் காட்சி வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்