ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவம் - சிர்புகர் விசாரணை ஆணையத்திற்கு மேலும் 6 மாத கால அவகாசம்

ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவத்தை விசாரிக்கும் சிர்புகர் தலைமையிலான ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் மேலும் 6 மாத காலம் வழங்கி உள்ளது.
ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவம் - சிர்புகர் விசாரணை ஆணையத்திற்கு மேலும் 6 மாத கால அவகாசம்
x
ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவத்தை விசாரிக்கும், சிர்புகர் தலைமையிலான ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் மேலும் 6 மாத காலம் வழங்கி உள்ளது. கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேர் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புகர் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்க கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மேலும் ஆறு மாத காலம் அவகாசம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்