"நிலையான வளர்ச்சியை புதுச்சேரி எட்டும்" - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

நல்லாட்சி அடிப்படையில் முதன்மை இடத்தில் இருப்பதோடு நாட்டின் சிறந்த மாநிலமாக புதுச்சேரி இருப்பதாக மத்திய அரசு பாராட்டியிருப்பது பெருமிதமாக உள்ளதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
நிலையான வளர்ச்சியை புதுச்சேரி எட்டும் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி
x
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மனிதவள மேம்பாடு, பொதுச் சுகாதரம், நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் நல்லாட்சிக்கான குறியீடு தொடர்பாக மத்திய அரசு பாராட்டி உள்ளதை சுட்டிக்காட்டிய கிரண்பேடி, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பாராட்டுவதாக தெரிவித்தார்.  கொரோனா எதிர்ப்பு போரில் புதுச்சேரி தேசிய அளவில் முன் மாதிரியாக செயல்பட்டு உள்ளதாகவும், 2019-20 நிதி ஆண்டில் ஒதுக்கீடு செய்த நிதியில் 93 சதவீதத்தை அரசு செலவு செய்து உள்ளதாகவும் தெரிவித்தார். புதுச்சேரி மாநிலத்தில் தனி நபர் வருமானம் இந்தாண்டு 5.3 சதவீதம் உயர்ந்து உள்ளதாக தெரிவித்த கிரண்பேடி, புதுச்சேரி பொறியியல் கல்லூரி, தொழில் நுட்ப பல்கைக் கழகமாக விரைவில் செயல்படும் என அறிவித்தார். அரசின் அனைத்து நிதி ஆதாரங்களையும் பயன்படுத்தி வறுமையை நீக்குவதில், அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக கிரண்பேடி பாராட்டு தெரிவித்தார்.  நிலையான வளர்ச்சியை எதிர்வரும் காலங்களில் எட்டும் என உறுதியாக நம்புவதாக கிரண்பேடி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்