சட்டப் பேரவை தொகுதிகளில் இடைத் தேர்தல் - இந்திய தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
பதிவு : ஜூலை 24, 2020, 03:51 PM
பீகார், உத்தரப் பிரதேசம், கேரளம், அசாம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் உட்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கொரோனா சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடத்த  வாய்ப்பில்லை என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 56 சட்டப் பேரவை தொகுதிகள் மற்றும் பீகார் மாநிலத்தில் உள்ள  வால்மீகி நகர் மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்த தேர்தல் ஆணைய உயர்மட்ட  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இடைத் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து இந்த  கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, காலியாக உள்ள தொகுதிகளுக்க இடைத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. தேர்தல் அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல்  ஆணையம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2976 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

1665 views

"சாமானிய மக்களுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா" - அமைச்சர் சரோஜா தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதியவர்களுக்கான உதவித் தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

325 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

254 views

பிற செய்திகள்

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் - மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

புதுச்சேரியில் ஆட்சி அமைத்திடும் சூழலை உருவாக்குவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

217 views

அனுமான் கடி கோயிலில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் சாமி தரிசனம்

அயோத்தியில் உள்ள அனுமான் கடி கோயிலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் செய்தார்.

9 views

"ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் ரூ.2.90 லட்சம் கோடி" - தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஜூலை மாதத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

187 views

மோடி தலைமையில் ராம் ராஜ்யம் அமையும் என்ற நம்பிக்கை வந்துள்ளது - ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

பிரதமர் மோடி ஆட்சியின் கீழ், இந்தியாவில் ராம ராஜ்யம் அமையும் என்ற நம்பிக்கை தமக்கு வந்துள்ளதாக ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

6 views

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 பேருக்கு கொரோனா தொற்று.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்து 972 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

5 views

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா - வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கு அழைப்பு

ராமர் கோயில் பூமி பூஜைக்கு, அயோத்தி விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.