வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் - வெள்ளத்தில் தத்தளிக்கும் வடமாநிலங்கள்

அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தொடரும் கனமழையால், வெள்ளம் ஏற்பட்டு, மக்களின் நிலைமை வெகுவாக பாதிப்படைந்துள்ளது
வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் - வெள்ளத்தில் தத்தளிக்கும் வடமாநிலங்கள்
x
அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தொடரும் கனமழையால், வெள்ளம் ஏற்பட்டு, மக்களின் நிலைமை வெகுவாக பாதிப்படைந்துள்ளது. அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 89ஆக உயர்ந்துள்ளது. அந்தமாநில நிர்வாகம் வெள்ளநீரை கட்டுப்படுத்துதல் மற்றும் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. தொலைதூர கிராமங்களில் வெள்ளத்தில் பரிதவிக்கும் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழு ஈடுபட்டுள்ளது. 

காட்டாற்று வெள்ளத்தில் சேதமான பாலம் - சேதமான பாலத்தை பயன்படுத்தும் மக்கள் 

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி அருகே காட்டாற்று வெள்ளத்தில் பாலம் சேதமானதால், ஆபத்தான முறையில் கிராமமக்கள் நதியை கடந்து செல்கின்றனர். வெள்ளநீரில் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், மரம் மற்றும் பாறைகளை கொண்டு அமைக்கப்பட்ட தற்காலிக பாதையில் நதியை கடக்கிறார்கள். மழை வெள்ளத்தில் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு ஸ்திரத்தன்மையுடன், நிரந்தர பாலம் அமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை


அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93 -ஆக உயர்ந்துள்ளது. அந்த மாநிலத்தில் பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 26 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 28 லட்சத்து 32 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் நேற்று மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை 93 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் திடீர் மழையால் வெள்ளப் பெருக்கு


மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் பெய்த கனமழையை அடுத்து திடீ​ர் வெள்ளப் பெருக்கு ஏ​ற்பட்டது. இதில் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
 
தெலங்கானா - வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்


தெலங்கானா மாநிலம் விக்காராபாத் மாவட்டத்தில் உள்ள தந்தூர் பகுதியில் பெய்த கனமழையால் பலகிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது

Next Story

மேலும் செய்திகள்