மதுரை மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்துள்ளது
பதிவு : ஜூலை 24, 2020, 12:21 PM
மாற்றம் : ஜூலை 24, 2020, 12:36 PM
மதுரையில் மேலும் 318 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், மாவட்டடத்தின் மொத்த பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்துள்ளது.
மதுரையில் மேலும் 318 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், மாவட்டடத்தின் மொத்த பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 965 பேர் குணமடைந்த நிலையில், 2 ஆயிரத்து 836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 183 பேர் பலியாகி உள்ளனர். 

தேனி - ஒரே நாளில் 208 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தேனி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 3 ஆயிரத்து 464 ஆக உயர்ந்துள்ளது. 

விழுப்புரத்தில் புதிய உச்சம்... பலி 31 ஆக அதிகரிப்பு

 விழுப்புரத்தில் இன்று புதிதாக 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 827 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களில் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 3 பெண் மருத்துவர்கள், 2 ஆண் மருத்துவர்களுக்கும், 13 செவிலியர்கள் மற்றும் 9 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 31 பேர் உயிரிழந்துள்ளனர். 

நெல்லை - மேலும் 204 பேருக்கு கொரோனா

நெல்லையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 423 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆயிரத்து 886 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், ஆயிரத்து 318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில், கொரோனாவிற்கு  பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உள்ளது.

இன்று புதிதாக 97 பேருக்கு கொரோனா  - பாதிப்பு எண்ணிக்கை 2,513ஆக உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் இன்று புதிதாக 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 513ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 483 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், 996 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் தற்போதுவரை கொரோனாவுக்கு 34 பேர் உயிரிழந்துள்ளனர். 

"கேரளாவில் ஒரே நாளில் 1,078 பேர் பாதிப்பு" - முதல்வர் அதிர்ச்சி

கேரளாவில் ஒரே நாளில் ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா உறுதியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  

இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து110 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளதாகவும், முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், 9 ஆயிரத்து 458 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், இதுவரை 6 ஆயிரத்து 596 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறினார். நோய் தீவிரமுள்ள பகுதியான ஹாட்ஸ் பாட் எண்ணிக்கை 428 உள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், முழு ஊரடங்கு குறித்து  தற்போது முடிவு செய்யவில்லை  என முதல்வர் கூறினார்.
---------------------------------------------------------------------------

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

411 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

397 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

106 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 views

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

27 views

பிற செய்திகள்

முழுக் கொள்ளளவை நெருங்கும் பவானி அணை- வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளவான 102 அடியில் 101 அடியை எட்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4 views

சென்னையில் கஞ்சா மொத்த விற்பனை - பெண் உட்பட 4 கஞ்சா வியாபாரிகள் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா மூட்டைகளை கொண்டு வந்து சென்னை வண்ணாரப் பேட்டையில் மொத்த விற்பனை செய்த கஞ்சா வியாபாரிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

51 views

ஓட ஓட விரட்டி இளைஞர் குத்தி கொலை - கஞ்சா தர மறுத்ததால் நடந்த விபரீதம்

தாம்பரம் அருகே கஞ்சா தர மறுத்ததால் இளைஞர் ஓட ஓட விரட்டி குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

23 views

கொரோனா நோய் தொற்று உறுதியானதால் அதிர்ச்சி- மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 52 வயது பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

161 views

காவலர்கள் பணியிட மாற்றம் - விருப்ப மனுக்களை உடனடியாக பெற உத்தரவு

சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாற்றம் தொடர்பான விருப்ப விவரங்களை பெற்று உடனடியாக காவல் ஆணையர் அலுவலகம் அனுப்ப காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

73 views

(11/08/2020) ஊர்ப்பக்கம்

(11/08/2020) ஊர்ப்பக்கம்

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.