ஹேமர் ஏவுகணைகளை பிரான்ஸிடம் இருந்து வாங்கும் இந்தியா - இந்திய விமானப்படைக்கு மேலும் பலம் சேர்க்க திட்டம்

ரபேல் போர் விமானத்தின் திறனை அதிகரிக்க கூடிய ஹேமர் ஏவுகணைகளை இந்தியா பிரான்ஸிடம் வாங்குகிறது.
ஹேமர் ஏவுகணைகளை பிரான்ஸிடம் இருந்து வாங்கும் இந்தியா - இந்திய விமானப்படைக்கு மேலும் பலம் சேர்க்க திட்டம்
x
கடந்த 2016ம் ஆண்டு  இந்தியா , பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதில் முதல்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள், மே மாத இறுதியில் இந்தியாவுக்கு வழங்கப்பட இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக போர் விமானங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த 5 போர் விமானங்கள் வரும் 29ம் தேதி இந்தியாவிடம் வழங்கப்பட இருக்கிறது. இதற்கிடையே ரபேல் போர் விமானங்களின் திறனை அதிகரிக்க கூடிய ஹேமர் ஏவுகணைகளை , அவசர உத்தரவின் பேரில் வாங்க இந்தியா , பிரான்ஸிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. 60 முதல் 70 கிலோ மீட்டர் வரம்பிற்குள் உள்ள எந்த ஒரு இலக்கையும் இந்த  ஹேமர் ஏவுகணைகளை பயன்படுத்தி துல்லியமாக தாக்க முடியும் என கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்