டெல்லியில் 4-ல் ஒருவர் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர் - சுகாதார அமைச்சகம் நடத்திய ஆய்வில் தகவல்
கொரோனா பரவல் தொடங்கி 6 மாதம் ஆகியுள்ள நிலையில் டெல்லியில் நான்கில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா பரவல் தொடங்கி 6 மாதம் ஆகியுள்ள நிலையில் டெல்லியில் நான்கில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய சுகாதாரஅமைச்சகம் 21 ஆயிரத்து 387 பேரின் மாதிரிகளை எடுத்து நடத்திய சோதனையில் 23.48 சதவீதம் பேரின் ரத்தத்தில், நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது பெரும்பாலானவர்கள் அறிகுறி அற்றவர்கள் என்றும், அவர்களுக்கு நோய் ஏற்பட்டு தாமாகவே குணமாகி ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகி இருப்பது அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Next Story

