ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க குதிரைப் பேரம் - விசாரணைக்கு தயார் என மத்திய அமைச்சர் தகவல்
ராஜஸ்தான் விவகாரத்தில் தமது பங்களிப்பு தொடர்பான வாக்குமூலத்தையும், குரல் பதிவையும் தருமாறு உதவியாளர் மூலம் சிறப்பு நடவடிக்கை குழு நோட்டீஸ் அளித்து உள்ளதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் விவகாரத்தில் தமது பங்களிப்பு தொடர்பான வாக்குமூலத்தையும், குரல் பதிவையும் தருமாறு உதவியாளர் மூலம் சிறப்பு நடவடிக்கை குழு நோட்டீஸ் அளித்து உள்ளதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். தமது குரல் உள்ளதாக கூறப்படும் ஆடியோ தட்டின் உண்மைத் தன்மை குறித்து முதலில் சோதிக்க வேண்டும் என்றும், யார் அனுமதியின் பேரில் அது பதிவு செய்யப்பட்டது? யார் அதனை பதிவு செய்தார்கள் ? என்பதை விசாரித்து, அதன் உண்மைத் தன்மையை முதலில் உறுதி செய்து விட்டு தம்மை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என, மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான எந்தவிதமான விசாரணைக்காகவும் தமது இல்லத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
Next Story

