ஆயுதப் பயிற்சி மேற்கொள்ளும் கரடி

கரடி ஒன்று ஆயுதத்தை வைத்து பயிற்சி மேற்கொள்ளும் காட்சி இணையத்தில் பரவியது.
ஆயுதப் பயிற்சி மேற்கொள்ளும் கரடி
x
கரடி ஒன்று ஆயுதத்தை வைத்து பயிற்சி மேற்கொள்ளும் காட்சி இணையத்தில் பரவியது. இது ட்விட்டரில் 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்ட் ஆனது. மேலும் கரடி பயிற்சி மேற்கொள்ளும் காட்சியை பார்த்த நெட்டிசன்கள் அதை குங்ஃபூ பாண்டா, பியர் வித் புரூஸ்லீ மற்றும் பிளாக் பெல்ட் பாண்டா என பெயர் வைத்து ஷேர் செய்கின்றனர்.

யானை மீது அமர்ந்து போட்டோ ஷூட்   


நடிகை சாக்சி அகர்வால், யானை மீது அமர்ந்து எடுத்த போட்டோ ஷூட், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிகழ்வின் போது, யானை தும்பிக்கை ஷவரால் தன்னை குளிப்பாட்டி விட்டதாக, சாக்சி அகர்வால் தெரிவித்துள்ளார். 

பாகனுடன் விளையாடும் குட்டியானை


கர்நாடகாவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில்  வேதவதி என்னும் குட்டியானை, பாகனுடன்  மிக சகஜமாக விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளது. வேதவதியை மீட்டுக் கொண்டு வரும்பொழுது 89 கிலோ எடை இருந்ததாகவும், தற்போது 110 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாகவும் அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மரக்கன்று நட்ட ராஷ்மிகா - பரவும் வீடியோ


நடிகை ராஷ்மிகா மந்தனா, மரக்கன்று நடும் காட்சியை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து பரவி வருகிறது.

செல்லம்மா பாடல் - ரசிகர்கள் வரவேற்பு


சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின், செல்லம்மா என்ற பாடல் கடந்த 16ம்தேதி வெளியானது. இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், யூ-டியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

தீவிர பயிற்சியில் சுரேஷ் ரெய்னா


இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா, கேட்சிங் பயிற்சி  வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட ரகானே 


இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவர் மெண்டல் ஹெல்த் அவார்னஸ் என்கிற தலைப்பில் ஒரு பதிவு போட்டு இருந்தார். இதற்கு கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் பலரும் தங்கள் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் இந்திய  டெஸ்ட் அணியின் துணைகேப்டன் ரஹானே, உடற்பயிற்சி காணொலியை பகிர்ந்துள்ளார்.

மழைத்துளி - அனுபவித்த சச்சின் 


சச்சின் டெண்டுல்கர், தனது வீட்டில் மழையில் நனையும் வீடியோ வெளியாகி உள்ளது. சச்சின் டெண்டுல்கர் தனது மகள் தான் எனக்கு சிறந்த கேமரா உமன் என்று கூறியுள்ளார். மேலும் மழைத்துளிகள் எனது சிறுவயது ஞாபகத்தை தூண்டுவதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்